மின் கம்பி கட்டி விலங்குகளை வேட்டையாட முயன்ற நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மின் கம்பி கட்டி விலங்குகளை வேட்டையாட முயன்ற நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எத்திராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில், மர்ம கும்பல் ஒன்று, கம்பி கட்டி, உயரழுத்த மின் கம்பத்திலிருந்து அதற்கு மின் இணைப்பு கொடுத்து மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த கும்பலைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், காலையில் மின் இணைப்பைத் துண்டிக்க வந்தபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
Comments