பிரான்ஸில், இனவெறித்தாக்குதலில் 'குர்து' இன மக்கள் 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸில், இனவெறித்தாக்குதலில் குர்து இன மக்கள் 3 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
2013-ம் ஆண்டு, பாரிஸில், குர்து பெண்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட இருந்த நிலையில், குர்து கலாச்சார மையத்தில், 69 வயது முதியவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
அதனை கண்டித்து குர்து மக்கள் நடத்திய பேரணியில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
கார்களை தலைகீழாகக் கவிழ்த்தும், கையில் கிடைத்ததை எல்லாம் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்புறப்படுத்தினர்.
Comments