திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய காட்சி இணையத்தில் வைரல்..!

0 2491

மத்தியபிரதேசத்தில், திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணை, ஆண் நண்பர் தாக்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

ரேவா மாவட்டத்தில், 19 வயது பெண்ணை திருமணம் செய்ய, அவரது ஆண் நண்பர் விருப்பம் தெரிவித்ததாகவும், குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறி திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இளம்பெண்ணை அறைந்த ஆண் நண்பர், அவரது முடியை பிடித்து இழுத்து தாக்கி கீழே தள்ளினார். தாக்குதலில், மயக்கமடைந்த பெண்ணை தொடர்ந்து அந்த நபர் தாக்கிய நிலையில், இளைஞரின் நண்பர் தாக்குதல் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

சாலையோரம் மயக்கமடைந்து இருந்த பெண்ணை மீட்ட போலீசார், வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தநிலையில், மற்றொருவரை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments