மனதின் குரல் நிகழ்ச்சி - முகக்கவசம் அணிய பிரதமர் அறிவுறுத்தல்

0 1143

உலகின் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், முகக்கவசம் அணிவதுடன், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

96-வது மற்றும் இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  கல்வி, உள்கட்டமைப்பு உள்பட பல துறைகளில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என புகழாரம் சூட்டினார்.

கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் இருந்த சவால்களை இந்தியா சமாளித்துள்ளதாக கூறிய பிரதமர், யோகா மூலம் மார்பக புற்றுநோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற டாடா ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவை சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments