மங்களூரு அருகே கடையின் முன் நின்றிருந்த நபர் படுகொலை.. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்..!

மங்களூரு அருகே கடை முன் நின்றிருந்த நபர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரா பகுதியில் நேற்றிரவு தனது கடை வாசலில் நின்றிருந்த ஜலீல் என்பவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஜலீல் உயிரிழந்த நிலையில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க மங்களூருவுக்கு உட்பட்ட பகுதிகளில் டிச.27ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments