தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை குமரிக்கடல் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்பதால் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Comments