சின்சினாட்டியில் வீடுகள், சாலைகளை மூடிய பனிப்பொழிவை டைம் லாப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ..!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்கள், படிப்படியாக பனியால் மூடப்படும் காட்சிகள் டைம் லாப்ஸ் முறையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மற்ற பகுதிகளை போலவே ஓஹியோ மாகாணத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவுகுறது. சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சென்றதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
பனிப்புயலால் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments