அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான பனிப்புயலால் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

0 2049

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன.

நியூயார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக, பஃபலோ(Buffalo) நகரில் வீடுகளும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியால் சூழப்பட்டன.

சாலைகளில் பல அடி உயரத்திற்கு குவிந்துள்ள பனியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தை எதிர்கொள்வதால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments