சீனாவில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு.. கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் கட்டுக்குள் அடங்க மறுக்கும் கொரோனா..!

சீனாவில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 கோடி பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் பாதிப்பில் இருந்து சீனா விடுபட பலமாதங்களாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பணிந்து பூஜ்யம் கோவிட் கொள்கையை சீன அரசு தளர்த்தியதையடுத்து இருபதே நாட்களில் 3 ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்த கோவிட் சுனாமி பேரலையாக சீனாவை சூழ்ந்துள்ளது.
தற்போது உருமாறிய பி.எப். 7 வகை கொரோனா பாதிப்பால் சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
Comments