கடற்கரையில் 1.5 டன்கள் தக்காளியைக் கொண்டு கண்ணைக் கவரும் 27 அடி உயர கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம்..!

ஒடிசா மாநிலம் கோபால்புர் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 27 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சாந்தா கிளாஸ் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் அமைந்துள்ள இந்த சிற்பத்தை உலகப் புகழ் பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.
ஒன்றரை டன்கள் தக்காளியும் மணலும் கொண்டு இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த சிற்பத்தை முடிக்க சுதர்சனின் 15 மாணவ மாணவியர்கள் உதவி புரிந்துள்ளனர்
Comments