தட்டி விட்டா தாறுமாறு.. தடுக்கி விழுந்தது யாரு பாரு.. வாரிசு ரசிகர்கள் தள்ளுமுள்ளு.. தானாக சென்று தடியடி வாங்கினர்..!

0 8744
தட்டி விட்டா தாறுமாறு.. தடுக்கி விழுந்தது யாரு பாரு.. வாரிசு ரசிகர்கள் தள்ளுமுள்ளு.. தானாக சென்று தடியடி வாங்கினர்..!

வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு திரண்ட ரசிகர்கள் போலீசாரை தள்ளிக்கொண்டு ஸ்டேடியத்துக்குள் நுழைந்ததால் போலீசார் காயம் அடைந்தனர். தட்டி விட்ட ரசிகர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. சுமார் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு அழைப்பு பாஸ் அனுப்பபட்டிருந்ததால், தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த ரசிகர்கள் காலையில் இருந்தே ஸ்டேடியத்தில் வாசலில் குவியத்தொடங்கினர். சிலர் நடிகர் விஜய்யை மகா விஷ்ணுவாக சித்தரித்து அச்சிடப்பட்ட பேனருக்கு தேங்காய் உடைத்து வழி பட்டனர்.

மாலை நேரம் பிரபலங்கள் ஒவ்வொருவராக அங்கு வர ஆரம்பித்ததும் ரசிகர்கள் கூட்டமும் முண்டி அடித்தது. அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் அது இல்லாத ரசிகர்களும் உள்ளே நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசாரை முட்டி தள்ளினர்.

வெறி கொண்டு தள்ளிய ரசிகர்கள் போலீசாரை தட்டி விட்டு அவரகளை ஏறி மிதித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வாசலில் நின்ற சில போலீசார் காயம் அடைந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் கேட்டை இழுத்துப்பூட்டியதோடு சாலையில் நின்று தள்ளு முள்ளுவை உண்டாக்கிய ரசிகர்களை லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இவ்வளவு களே பாரங்களுக்கும் மத்தியில் மப்டியில் வந்த ஸ்கூல் பையன் ஒருவன் கையில் பாஸுடன் வந்து போலீசாரிடம் ஏதோ கேட்க முயல வெறுப்பில் இருந்த உதவி ஆய்வாளர் அவனை அடிக்காத குறையாக விரட்டினார்.

தடியடிக்கு பயந்து அக்கம்பக்கத்து தெருக்களுக்குள் அடைக்கலமான ரசிகர்கள் ஒருமுறையாவது விஜய்யை பார்த்து விட மாட்டோமா..? என்ற ஏக்கத்தில் சாலையில் காத்திருந்தனர். வாண்டடாக சென்று போலீசாரிடம் அடி வாங்கினாலும், வாரிசை காணும் ஆவல் அவர்களுக்கு குறையவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments