பொங்கல் பரிசில் செங்கரும்பையும் இணைத்து வழங்க அன்புமணி கோரிக்கை..!

பொங்கல் பரிசில் செங்கரும்பையும் இணைத்து வழங்க அன்புமணி கோரிக்கை..!
விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், பொங்கல் பரிசில் செங்கரும்பையும் வழங்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த அவர், பாதுகாக்கப்பட வேண்டிய காப்புக்காட்டிற்கு அருகே, கல்குவாரி அமைப்பது குறித்த அரசாணையை, அரசு திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்தார்.
வாட்ச் அரசியல் குறித்து, எழுப்பிய கேள்விக்கு, தான் அதனை கட்டவில்லை எனவும் அன்புமணி பதிலளித்தார்.
Comments