எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி மரியாதை..!

0 1556

அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மேடையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, நினைவு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்கள் புடை சூழ, எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். பிறகு, சசிகலா தரப்பினர் அங்கு உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோல, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும், தனது கட்சித் தொண்டர்களுடன் வந்து, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments