எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்ற இபிஎஸ்..!

0 1435

அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கருப்பு நிற உடை அணிந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் நினைவு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments