ஓஹியோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!

0 1044

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

ஓஹியோ நெடுஞ்சாலையில் சாண்டஸ்கி நகருக்கு அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெவ்வேறு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

மேலும், பனிப்பொழிவால் சாலைகளில் தெரிவுநிலை குறைந்திருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments