பீகாரில் செங்கல் சூளை புகைபோக்கி வெடித்து 9 பேர் உயிரிழப்பு..!

0 1055

பீகாரின் பர்பிசம்பரன் மாவட்டத்தில் நரிர்கிரி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையின் புகைபோக்கி வெடித்ததில் 9 பேர் இறந்தனர்.

மீட்பு பணியில் போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு காயமடைந்த ஏராளமானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் ரகசல் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு இறந்தவர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments