நினைவில் மறையாத பொன்மனச் செம்மல்..
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைந்து இன்றுடன் 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. திரைத்துறையிலும், அரசியலிலும் சாதித்துக் காட்டிய மக்கள் திலகத்தை நினைவுகூரும் ஒரு செய்தி..
எம்.ஜி.ஆர்.... சினிமாவிலும், அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் உச்சரிக்கப்பட்டு, தமிழக சரித்திர ஏடுகளில் இடம்பெற்றுவிட்ட மந்திரச் சொல் இது.
ரசிகர்களை உற்சாகப்படுத்திய எம்.ஜி.ஆரின் அனல்பறக்கும் வசனம்தான் இது - சமூகக் கருத்துக்களையும், உயர்ந்த தத்துவங்களையும் ரசிகர்களிடம் பரப்பியவர் எம்.ஜி.ஆர்.! தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ரசிகர்கள் அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாரதி, பாரதிதாசன், காந்தி, பெரியார், அண்ணா ஆகியோரின் சிந்தனைகளை தமது திரைப்படங்களின் வாயிலாக மக்களிடம் எடுத்துச் சென்றவர் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆர் தன் முகத்தை ஒருமுறை மக்களிடம் வந்து காட்டினாலே போதும், அதிக ஓட்டுகளை பெற்று வெற்றிபெறுவோம் என்றார் அண்ணா... அது உண்மை என்பதை எம்.ஜிஆரின் அரசியல் வாழ்வு நிரூபித்தது...
அ.தி.மு.க.வைத் தொடங்கியபின், அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்றுமுறை முதலமைச்சரானார். சிறுவயதிலேயே பசிப்பிணியை உணர்ந்திருந்த எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி குழந்தைகளின் பசியைப் போக்கினார். மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை தனது ஆட்சியில் அறிமுகப்படுத்தினார்
எம்.ஜி.ஆர்.. அவர்மீது கொண்ட அன்பினால் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர், இதயக்கனி, வாத்தியார் என்றெல்லாம் மக்கள் அழைத்து மகிழ்ந்தனர்.
வாழும் நாளில் வாழ்வது வாழ்க்கையல்ல, இறந்தபின்னும் வாழும் வாழ்க்கைதான் சிறந்தது என்ற வார்த்தைகளை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் தமிழக மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
Comments