பொது இடத்தில் குந்தகம்.. ஆபாச யூடியூப்பருக்கு ஆப்படித்த போலீஸ்..! காவல் நிலையத்தில் கேமரா
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மாணவ மாணவிகளின் மனதை கெடுக்கும் வகையில் ஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்ததாக பெண் யூடியூப்பரை பிடித்து வழக்கறிஞர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார்
இப்படிப்பட்ட மகா மட்டமான கேள்விகளை மாணவ மாணவிகளிடம் கூச்சமின்றி கேட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றி வருவதாக ‘வீராடால்க்ஸ்’ என்ற யூடியூப்பர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது
சென்னை மெரீனா கடற்கரையில் கையில் மைக் உடன் சுற்றிய வீரா டால்க்ஸ் யூடியூப்பின் பெண் வர்ணனையாளரையும், இளம் பெண்களை படம் பிடித்த கேமராமேனையும் மடக்கிய வழக்கறிஞர் ஒருவர் , போலீசுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் கேள்வி கேட்டு பிராங்க் செய்து அதனை யூடியூப்பில் பதிவிடுவதாகவும் புகார் தெரிவித்தார்
விரைந்துவந்த போலீசார் அவர்களிடம் இருந்த கேமராவை பறிமுதல் செய்ததோடு இருவரையும் காவல் நிலையம் வந்து பெற்றுச்செல்லுமாறு கூறிச்சென்றனர்
காவல் நிலையத்தில் வைத்து யூடிப்பரிடம் விசாரித்த காவல்துறையினர் , பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்ததோடு, இனி மேல் இவ்வாறு தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
Comments