குடியிருப்பு பகுதியில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட ரெஸ்ட்ரோ பாரினை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட ரெஸ்டோ பார் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு அனுமதியுடன் தனியார் நிறுவனம் அமைத்த அந்த பாரை அகற்றக்கோரி, நேற்றிரவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கற்களைக் கொண்டு பாரை அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக வையாபுரி மணிகண்டன் உட்பட 13 பேர் மீது, 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.
Comments