சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகளால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் 600 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்துக்கு மாறாக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் புறப்பட்டுச் சென்றனர்.
Comments