மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் -ஆசிரியர் அரெஸ்ட்

0 1596

சேலம் சேலத்தாம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சுரேஷ் பாபு, மாணவிகள் இயற்கை உபாதைக்கு செல்லும்போது, அப்பகுதிக்கு சென்று தவறாக சைகை காட்டியதாகவும், மாணவர்களை தன்னுடைய கால்களை பிடித்துவிட சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று சுரேஷ் பாபுபை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, மாணவர்கள் மற்றும் சுரேஷ் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, சுரேஷ்பாபுவை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments