சிக்கிம் மாநிலத்தில் சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலி..!

0 1976

வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

சாட்டனில் இருந்து தாங்கு நோக்கி சென்றபோது வளைவு ஒன்றில் வாகனத்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த 4 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments