இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணாக்கர்கள் மீது லாரி மோதி விபத்து..!

0 1997

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, பள்ளி மாணாக்கர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியிலுள்ள கல்குவாரியை மூடக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த வர்கீஸ் நவீன், லாவண்யா ஆகியோர், காரியாபட்டி அருகேயுள்ள தனியார் பள்ளியில், 10 மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை பள்ளி செல்வதற்காக, ஆவியூர் பேருந்து நிறுத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கல்குவாரியில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம், சாலையின் பக்கவாட்டில் இருந்து, சாலை மீது ஏறியபோது, அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் படுகாமடைந்த நிலையில், மாணவியின் கால் முற்றிலும் சேதமடைந்தது.

இதனால் ஆத்திமடைந்த பொதுமக்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி மூடப்படும் என காரியாபட்டி வட்டாட்சியர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments