ஆள் நடமாட்டம் இல்லாத குட்டையில் மூழ்கடித்து இளம்பெண் படுகொலை.. காதலன் கைது!
ராமநாதபுரம் அருகே மாயமான இளம்பெண் நான்கு மாதங்களுக்குப் பின் தஞ்சாவூர் அருகே குட்டையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வாத்தியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
மாதவன் நெருங்கிப் பழகிய நிலையில் கர்ப்பம் அடைந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசுகி வற்புறுத்தியுள்ளார். இதனால் அவருடன் தொடர்பைத் துண்டித்த மாதவன் தஞ்சை அருகே செங்கிப்பட்டிக்கு சென்று வேலை செய்து வந்துள்ளான்.
கர்ப்பமடைந்தது வீட்டிற்குத் தெரிய வந்ததால், மாதவனை தேடி செங்கிப்பட்டிருக்கு வந்த வாசுகியை தனது சகோதரர் திருக்கண்ணனுடன் சேர்ந்து குட்டை நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளான். உருக்குலைந்த சடலத்தின் எலும்புக் கூடுகளை மீட்ட போலீசார், ஆய்வுக்காக தடவியல் துறைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments