திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெற்றோருடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்.. போலீசார் விசாரணை!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாபநாசம் குடும்பத்துடன் திருச்செந்தூர் பகுதிக்கு வந்து கோயில் கடற்கரையில் தங்கி தினக்கூலி செய்து வருகிறார்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று இரவில் கடற்கரையில் குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். அதிகாலை 5 மணியளவில் அவர் மனைவி அருகே தூங்கிய குழந்தை முத்துப்பேச்சி மாயமானதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரித்துவருகின்றனர்.
Comments