ஊருக்குள்ள உள்ள மொத்த பயபுள்ள எதிர்த்து நிக்கட்டும் I AM GANGSTA...! அஜீத்தின் சவால் வரிகள் யாருக்கானது ?

0 4359

 நடிகர் அஜீத்குமாரின் துணிவு படத்தின் 3 வது பாடல் 25ந்தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழு தீப்பொறி பறக்கும் சவால்களுடன் பாடல் வரிகளை வெளியிட்டுள்ளது.

அஜீத்தின் நடிப்பில் துணிவு படம் ஜனவரி 12ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது

இந்த நிலையில் 25 ந்தேதி துணிவு படத்தின் 3 வது பாடல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, அந்த பாடலின் வரிகளை வெளியிட்டுள்ளது. எதிரிகளுக்கு சவால் விடும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த பாடலின் வரிகள்..!

சீண்டுனா சிரிப்பவன், சுயவழி நடப்பவன், சரித்திரம் படைப்பவன் ஹேங்ஸ்டா... என்று தொடங்கும் அந்த பாடலில், பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சு போற துணிவு கொண்டு பயணம் செய்யும் குணம் கொண்டவன் என்றும், நீதி காக்கும் நேர்மை கொண்டவன், அநீதி கண்டு பொங்கி எழுபவன், கேங்ஸ்டா... என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது

பெத்த பொண்ண காக்கும் அப்பனும், தாலாட்டும் தாய் சீறும் போதும் ஹேங்ஸ்டா என்றும் நம்பிக்கை இழக்காமல் போர் தொடுப்பவன், கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன் ஹேங்ஸ்டா என்று எழுதப்பட்டுள்ள இந்த பாடலில் இறுதி கட்ட வரிகள் எதிரிகளை சவாலுக்கு அழைப்பது போல உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

உனக்கு சம்பவம் இருக்கு என்றும் அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு, தடய உடச்சு, பயத்த செரிச்சு,ஊருக்குள்ள உள்ள மொத்த பய எதிர்த்து நிற்கட்டும்
I AM GANGSTA என்று பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்வரிகளை அஜீத் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பொங்கலுக்கு அஜீத்தின் துணிவு படத்துடன், விஜய்யின் வாரிசு படமும் களமிறங்குவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments