பெண்களை விரட்டிச்சென்று சாலையில் இடித்து தள்ளிய அடாவடி ஆட்டோ ஓட்டுனர்..! பட்டபகலில் பரபரப்பு சம்பவம்
சேலத்தில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டிச்சென்றவரை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்களை மறித்து ஆபாசமாக திட்டியதோடு, பின் தொடர்ந்து சென்று ஆட்டோவால் இடித்து தள்ளிவிட்டு தப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சேலம் மாநகரில் வின்சன்ட் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்று தாறுமாறாக செல்வதை கண்டு அந்த வழியாக இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்ற பெண்கள் கையை நீட்டி சாத்தம் போட்டுள்ளனர். இதனால் திரும்பி வந்த ஆட்டோ ஓட்டுனர் தன்னை சத்தம் போட்ட பெண்கள் சென்ற இரு சக்கரவாகனத்தை மறித்து வம்பு செய்தார்
அந்த பெண்களை நோக்கி ஆபாசமாக பேசி எச்சரித்ததோடு அவர்களை செல்லவிடாமலும் தடுத்தார். மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனரை சத்தம் போட்டு வழிவிட செய்தனர். இதையடுத்து இரு பெண்களும் அங்கிருந்து சென்றனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த ஆட்டோ ஓட்டுனர், அந்தப்பெண்களின் இரு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்றார். இந்த காட்சிகள்ளை மற்றொரு இரு சக்கரவாகனத்தில் சென்ற நண்பர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துச்சென்றனர்.
ஆட்டோ ஓட்டுனர் மின்னல் வேகத்தில் அந்த பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர் அதற்குள்ளாக அந்த இரு பெண்கள் சென்ற வாகனத்தை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகின்றது
கீழே விழுந்ததால் கைகளில் சிராய்ப்பு காயங்களுடன் அவதிப்பட்ட இரு பெண்களையும் அங்கிருந்த பெண்கள் மீட்டு அசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். புத்தி சொன்ன பெண்களை பழிவாங்கும் நோக்கில் பட்டபகலில் பின் தொடர்ந்து சென்று ஆட்டோவால் மோதி சாய்த்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அரிந்த போலீசார், இளம் பெண்களை இடித்துச்சென்ற ஆட்டோ ஓட்டுனரை தேடிவருகின்றனர்
Comments