ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாஜகவினர் கைது..!

திண்டுக்கல் மாவட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நாளை நடைபெற உள்ள மரக்கன்றுகள் நடும் சாதனை நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் உதயநிதி தலைமையில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை நிகழ்த்தும் முயற்சிக்காக 117 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என பாஜகவினர் கூறுகின்றனர்.
மரம் நடுவதற்கு தடை கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கோயில் நிலத்தில் நடப்படும் மரக்கன்றுகளின் பலன் கோயிலுக்கே சேரும் என்றும் மரத்தை பராமரிப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.
Comments