உத்தரப்பிரதேசத்தில் ரூ.2,800 கோடியை முதலீடு செய்யும் ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பாளர்கள்..!

ஆப்பிள் நிறுவனத்திற்காக உதிரி பாகங்கள் தயாரித்து விநியோகித்து வரும் சில நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலைகளை தொடங்க நிலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள சீனாவில் உற்பத்தியை குறைத்துக் கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், ஆப்பிளுக்கு மை தயாரித்து வழங்கும் செய்கோ என்ற நிறுவனம் மட்டுமே 850 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
23 ஏக்கரில் கேமரா உதிரிபாகங்கள் தயாரிக்கும் மற்றொரு ஆலையும் அமைய உள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments