பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

0 1243

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

பி.என்.டி காலனியில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மற்றும் ஜன்னல் கண்ணாடி, சேர், பூந்தொட்டிகளை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பா நாகர்கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் அவரது வீட்டில் திரண்டனர்.

போலீஸார் சிசிடிவி கேமராக்கள் பதிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments