பிரதமர் மோடி தலைமையில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை..!

0 1450

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நெரிசல் மிகு பொது இடங்களில் முகக்கவசம் அணியவும், கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

மெய் நிகர் வாயிலாக சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில், வைரஸ் தொற்றால் பாதிப்படையக்கூடியவர்கள் மற்றும் முதியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களும் மருத்துவ உள்கட்டமைப்புகளின் செயல்பாட்டு தயார்நிலை குறித்தும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் குறித்து தணிக்கை செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments