என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து ரூ.2 கோடி கொள்ளைக்கு திட்டம் போட்டுக்கொடுத்த முக்கிய நபர் கைது..!

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரி போன்று நடித்து, 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளைக்கு திட்டம் போட்டுக்கொடுத்த முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 13ம் தேதி ஜமால் என்பவரது வீடு மற்றும் செல்போன் கடையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் என கூறி சோதனையிட்ட 7 பேர், 2 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர்.
இதில் தொடர்புடைய 6 பேர் சரணடைந்த நிலையில், பணத்தை பதுக்கி வைத்திருந்த முகமது பாசில் என்பவனை நேற்று கைது செய்த போலீசார், ஒன்றரை கோடி ரூபாயையும் மீட்டனர்.
இந்நிலையில், கொள்ளையடிப்பதற்கு மூளையாக செயல்பட்ட சித்திக் என்பவன் போலீசாரிடம் சிக்கியுள்ளான்.
ஜமாலின் செல்போன் கடையில் பணியாற்றி வந்த சித்திக், ஜமாலிடம் அதிக பணம் புழங்குவதை அறிந்து திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மீதமுள்ள பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர்? என விசாரித்து வரும் போலீசார், அது ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Comments