ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த பழக்கடையை அகற்ற எதிர்ப்பு.. மாநகராட்சி வாகனத்தின் அடியில் படுத்து போராட்டம் செய்த கடை உரிமையாளர் கைது..!

0 1023

கன்னியாகுமரி நாகர்கோவிலில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி வாகனத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பார்வதிபுரம் பாலம் பகுதியில் பழக்கடை ஒன்று ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள், கடையில் இருந்த பழம் உள்ளிட்ட பொருட்களை டெம்போவில் ஏற்றினர்.

அந்த கடையின் உரிமையாளர் சுதீர்கான் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அந்த டெம்போவின் டயருக்கு அடியில் படுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் டெம்போவை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாநகராட்சி ஊழியர் ஒருவர் தன் காலால் சுதீர்கானின் தலையை நெம்பி தள்ளிய நிலையில், போலீசார் அவரின் காலை பிடித்து இழுத்து, வெளியே கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments