என்.எல்.சி.யில் நிலக்கரி சேமித்து வைக்கும் இடத்தில் தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..!

0 985

கடலூர் மாவட்டம் நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமித்து வைக்கப்படும் இடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பங்கர் என்று சொல்லப்படும் நிலக்கரி சேமித்து வைக்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக நிலக்கரி தீப்பிடித்ததில், கரும்புகையுடன் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.

தீ விபத்தில் சிக்கிய ஐந்து பேர், அனல்மின் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திருநாவுக்கரசு என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மற்ற நான்கு பேர், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து நெய்வேலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments