சுயேட்சை பெண் கவுன்சிலரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல்..!

0 1098

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத்தலைவர், சுயேட்சை பெண் கவுன்சிலரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாக, வீடியோ வெளியாகியுள்ளது.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தடிக்காரன்கோணம் பகுதி 3வது வார்டு உறுப்பினரான மேரி ஜாய், ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து பெறப்பட்ட தொகையைக்கொண்டு, தனது வார்டிலுள்ள சந்தையில் மேற்கூரை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்றத்தலைவரும், தோவாளை வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பிராங்க்ளின், தனது அனுமதியின்றி இங்கு பணிகள் நடைபெறக்கூடாது என கூறி தடுத்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments