தாய் அடித்ததாக 15 வயது மகன் அளித்த புகாரின் பேரில் தாய் மீது வழக்கு பதிவு..!

0 2913

கோயம்புத்தூர் மணியக்காரன்பாளையத்தில் கார் ஓட்டிய 15 வயது மகனை அடித்த தாய் மீது, மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தீபக் அரோரா - பிரியா தம்பதியின் 15 வயது மகன், தாய்க்கு தெரியாமல், காரை எடுத்துச்சென்று ஓட்டி போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் அவனை பிரியா கண்டித்து அடித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தாயிடம் சண்டையிட்டு தந்தையை தேடிச்சென்ற அந்த சிறுவன் அளித்த புகாரின் பேரில் தாய் பிரியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கணவர் ஆதரவாளர்களுடன் வந்து ஆபாசமாக பேசி 13 வயது மகளை தாக்கியதாக , பிரியா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments