லெபனானில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம்..!

0 977

லெபனானில் விழிப்புணர்வை ஏற்படுத்த, மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப் பரப்பவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நன்கொடையாக பெறப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பச்சை நிற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் வெள்ளை நிற பாட்டில்கள் மூலம், இந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை வடிவமைக்க ஒரு மாத காலம் ஆனதாக கூறப்படுகிறது. நாம் வாழும் பூமியை சேதப்படுத்தினால், வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என வடிவமைத்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments