ஜெருசலேமில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.. ஒட்டகத்தில் சென்று வாழ்த்து தெரிவித்த "கிறிஸ்துமஸ் தாத்தா..!"

ஜெருசலேமில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.. ஒட்டகத்தில் சென்று வாழ்த்து தெரிவித்த "கிறிஸ்துமஸ் தாத்தா..!"
ஜெருசலேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர், ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சென்று, மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாலஸ்தீனிய கிறிஸ்தவரான இசா கஸ்ஸிஸி என்ற அந்த நபர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று, மக்களுக்கு கிறிஸ்துமஸ் மரங்களை பரிசளித்தார்.
அவருடன், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தாமஸ் நைட்ஸும் சென்றார். இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் நீட்டித்து வரும் நிலையில், அவர் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
Comments