பட்டமளிப்பு நிகழ்ச்சியிலேயே, மாணவர் ஒருவர் தனது காதலிக்கு, காதலை வெளிப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல்..!

அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியிலேயே, மாணவர் ஒருவர் தனது காதலிக்கு, காதலை வெளிப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புதிதாக பட்டம் பெற்ற மாணவர் டேவிட் என்பவர், தனது காதலி ரியான் ஸ்வானை மேடைக்கு அழைத்து, அவருக்கு மோதிரத்தை அணிவித்து, தனது காதலை தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராமல் ஆச்சரியத்தில் திளைத்த காதலி ஸ்வான், ஆனந்த கண்ணீருடன் காதலை ஏற்றுக்கொண்டார்.
Comments