தடுப்பூசி செலுத்திய மறுநாளில் 52 நாட்களான ஆண் குழந்தை இறப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தில் பிறந்து 52 நாட்களே ஆன ஆண் குழந்தை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகுமார்-சுகன்யா தம்பதியினர், குழந்தைக்கு 45வது நாளில் போடப்பட வேண்டிய தடுப்பூசியை தாமதமாக ஆலாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று போட்டுள்ளனர்.
ஒரு நாள் முழுவதும் நன்றாக இருந்த நிலையில் இன்று காலையில் குழந்தையின் மூக்கு, வாயிலிலிருந்து ரத்தம் கசிந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைக்கு ஒருரே நாளில் 3 தடுப்பூசி போடப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளதோடு போலீஸிலும் புகார் அளித்தனர்.
அதே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மற்ற குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், உடற்கூராய்வு முடிவுகளைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Comments