இஸ்ரேலில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்கும் சிறிய ரக மின்சார விமானம்..!

0 1511

இஸ்ரேலியர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உள்ளூரில் பயணிக்க, அந்நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமொன்று, சிறிய ரக மின்சார விமானத்தை வடிவமைத்துள்ளது. 

இ-விடோல் என பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார விமானம், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில், ஆயிரத்து 200 அடி உயரம் வரை பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா சோதனையோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில், சுமார் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 பேர் பயணிக்கக்கூடிய இந்த மின்சார விமானத்தை, குறுகிய கால பயிற்சிக்குப்பின் எளிதாக இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments