குஜராத்தில் மருத்துவமனை ஒன்றில், தாய் மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுப்பு..!

0 1103

குஜராத்தில் மருத்துவமனை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள், அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத்தில் புலாபாய் பூங்கா அருகேயுள்ள மருத்துவமனையில், ஆபரேஷன் தியேட்டரில் உள்ள அலமாறியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் மருத்துவமனை ஊழியர்கள் திறந்து பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டதில், படுக்கைக்கு அடியில் இளம்பெண்ணின் தாயார் சடலமும் கிடப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவமனையில் பணிபுரியும் மன்சுக் என்பவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments