விவசாயிகளுக்கு ரூ.20,000 இலவசமாக வழங்க இலங்கை அரசு முடிவு..!

0 915

இலங்கையில் வேளாண் பணிகளுக்காக, விவசாயிகளுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை இலவசமாக வழங்க, அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து, இலங்கை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 800 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும், இந்த பணத்தை 12 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்வோருக்கு 10 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் விவசாயம் செய்வோருக்கு 20 ஆயிரம் ரூபாயும் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments