மதுகேட்டு ரகளை செய்த சிறுமிகள்.. கண்டித்த நபரை கத்தியால் குத்திக்கொலை..!

0 1564

கனடாவில் மதுகேட்டு ரகளையில் ஈடுபட்ட 8 சிறுமிகள், அதனை தட்டிக்கேட்ட 59 வயது நபரை, கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, டொரண்டோ நகரில், சாலையில் சென்ற பெண்ணிடம் 8 சிறுமிகள் மதுகேட்டு தகராறு செய்துள்ளனர். அவர்களை கண்டித்த நபரை, அந்த சிறுமிகள் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சிறுமிகளை கைது செய்த போலீசார், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களையும் கைப்பற்றினர். 

13, 14 மற்றும் 16 வயதிலான அந்த சிறுமிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் அன்றைய தினம் முதல்முறையாக சந்தித்திருப்பது, விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments