அரசு மதுபானக்கடையில் மது வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டிய 2 சிறுவர்கள் கைது!

0 1620

திருச்சி திருவானைக்காவல் அரசு மதுபானக்கடையில் மது வாங்கி விட்டு, பணம் கொடுக்காமல் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிச்சென்ற இரு சிறுவர்களை, சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் கைது செய்தனர்.

ஆயிரத்து 100 ரூபாய்க்கு மது வாங்கிய சிறுவர்கள், பணம் கேட்ட விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டியதுடன், ஆபாச வார்த்தைகளாலும் வசை பாடியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments