வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற்றது - சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!

0 1611

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாகையில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை வழியாக குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும் என்பதால், டிச.24ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

டிச.25ம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும், டிச.26ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோர பகுதிகளுக்கு டிச.26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments