கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விண்ணை முட்டும் கரும்புகை..!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விபத்துக்குள்ளானது.
பாரன்குவிலாவில் உள்ள அந்த பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு தொட்டி புதன்கிழமை தீப்பற்றி வெடித்து சிதறியது.
இதில், படுகாயமடைந்த தீயணைப்புவீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எண்ணெய் கிடங்கில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
இதற்கிடையில், தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர்.
தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை அந்நகர துறைமுக செயல்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments