நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பிரச்னை இன்னும் 2 ஆண்டுகளில் தீர்க்கப்படும் - அமித்ஷா!

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பிரச்னை இன்னும் 2 ஆண்டுகளில் தீர்க்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், போதைப் பொருட்களால் கிடைக்கும் பணம் நமது பொருளாதாரத்தை பலவீனமாக்குவதாகக் குறிப்பிட்டார்.
எல்லைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
போதைப்பொருள் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
Comments