உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டம்..!

0 1104

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த மேலும் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் - வெடிமருந்துகள் மற்றும் 800 மில்லியன் டாலர் நிதியுதவி இந்த தொகுப்பில் அடங்கும் என்று கூறப்படுகிறது.

(உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 11 மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.) ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை போதுமானதாக இருக்குமென்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments