சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்துப் பிரச்சனை காரணமாக இரு தரப்பினர் இடைய மோதல்..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சொத்துப் பிரச்சனை காரணமாக சார் பதிவாளர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே மோதல் மூண்டது.
ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த நங்கையப்பனுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தனது பூர்வீக சொத்தை விற்பனை செய்வதற்காக தனது மூத்த மகனையும், மகளையும் தவிர மற்ற இருவருடன் நங்கையப்பன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
தகவலறிந்து வந்த மற்ற இருவரும் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
Comments